நிலா

வானத்திலே பொட்டுதான்-அது
வட்டநிலா தட்டுதான்.
கானகத்தில் கொட்டுறான்-ஒரு
களிப்பினையே ஊட்டுறான்.

வட்டநிலா காட்டியே-அம்மா
வயிறு நிறைய ஊட்டுவாள்
கிட்டகிட்ட வாவென -ஒரு
கிளுகிளுப்பைக் கூட்டுவாள்

பாலைப் போன்ற ஒளியினால்-ஒரு
பரவசமே தோன்றிடும்
வேலை அலுப்புத் தீர்ந்திடும்-மறு
நாளும் உழைக்கத் தெம்பிடும்,

வட்டநிலா சுற்றியே -கோடி
வானப்பூக்கள் பூத்திடும்
எட்டநின்று பார்ப்பினும் -ஒரு
இனிய சுகம் கிட்டிடும்.

எழுதியவர் : பொதிகை மு.செல்வராசன் (8-Feb-14, 2:02 pm)
பார்வை : 138

மேலே