தகதிமிதா தாளமிடும்

என்ஜீவனுள் ஓயாமல்
ஒலித்துக கொண்டிருக்கும்
உச்சபட்ச இராகமாய்
உன்குரலோசை அனுதினம்
ஆலாபனையாய் அர்ச்சிக்கும்
கொலுசொலிக்கு சுதிசேர்க்கும்
வளவியை வருடிவிடும்
கம்மலிடம் கதைபாடும்
தொண்டைக்குழி தீண்டலில்
தகதிமிதா தாளமிடும்
சரீரத்தினுள் சங்கமித்து
சரிகமபதநியாய் சஞ்சலிக்கும்
வண்டின் ரீங்கார மெட்டெடுத்து
சிங்கார இசைமீட்டு நித்தமென்
பெண்மையில் இலயிக்குமெனை
சுவர்க்கத்தில் ஆழ்த்தும் ......