ராமனானேன்
அழகே!
வழிப் போக்கனாய்த்தான்
நானும் நடந்தேன்...
உன் புருவ நாண்களில்
பூட்டப் பட்டிருந்த
விழி அம்புகளைக்
கண்டவுடன் -
ராமனானேன்!
ஆனால்,
வில்லினை என்னால்
வளைக்கவே முடியவில்லை -
உன் இதயத்தை என்னால்
எடுக்கவே முடியவில்லை!
விண்ணப்பங்கள் மறுக்கப்பட்டன...
அம்புகள் குறி தவறின...
மௌனத்தின் முகவரிகளும்
மறந்து விட்டன...
ஆனால்,
மங்கை உந்தன் முகம் மட்டும்
மறக்கவே இல்லை!
அழகே!
வழிப் போக்கனாய்த்தான்
நானும் நடந்தேன்...
உன்னைக்
கண்டவுடன் தான்
ராமனானேன் !