நேசிக்கிறேன்

என்னை நானே
நேசிக்க வைத்தாய் நீ !
என்னை நேசித்து ..

யாவரையும் பார்த்துப்
புன்னகைக்கும் நீ
எனைக் கண்டவுடன்
மௌனிக்கிறாய்..
காதலின் மொழி
உயிரை உருக வைக்கும்
மௌனம்தானே !

எதுவும் எனை
ஈர்ப்பதில்லை ..
எதிலும் நான்
விழுந்ததில்லை !
உன் மின்காந்தக்
கண்களின் கவர்ச்சி
ஒன்றைத் தவிர !

உன்னைப் பற்றி
யோசித்து யோசித்தே வேறு
யோசனையற்றுப் போனேன்!

ஏதேதோ செய்கைகள்
என்னென்னவோ பதில்கள்
கலைந்திடும் கனவுகள்
அலைந்திடும் மனது
அலைக்கழிக்கும் நினைவுகள்
ஆர்ப்பரிக்கும் எண்ணங்கள்..

முடிவில் பதிலாக
தெளிவாய் இருக்கிறாய்
நீ ,என்னுள் !

எழுதியவர் : கார்த்திகா AK (8-Feb-14, 6:41 pm)
Tanglish : nesikiren
பார்வை : 181

மேலே