என் தோழன்
நீ மட்டுமே !
ந கனவுகளில் வாழ்ந்த நிமிடங்களை
கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தினாய்
மற்றவர்கள் என்னை கண்டு பொறாமை
கொள்ளும் விதம் அன்பை என்னிடம் காட்டினாய்
தந்தை தாய் அண்ணன் தம்பி என
எல்லா உறவுகளையும் ஒருங்கிணைத்து
என் முன்னே வந்து நின்றாய் என்
உயிருள் கலந்தாய்
நெகிழ்கிறேன் உன் அன்பினில்
கரைகிறேன் நமது நட்பினில்
என் உயிர் தோழனே !
விதி முறைகள் இல்லாமல்
பழகும் நமது நட்பு
முடிவு இல்லாமல் தொடர
ஒவ்வொரு நிமிடமும்
வணங்குகிறேன் இறைவனை
---------------------------------------------
என் உயிர் தோழனுக்கு சமர்ப்பணம்
--------------------------மகேஸ்வரி கோபால்.-----------------