வார்த்தைகளின் கோர்வை

"கோர்க்க இயலாத வார்த்தைகள்"

"சேர்க்க முடியாத ஆசைகள்"

"பிரிக்க முடியாத பார்வைகள்"

"சிரிக்க தெரியாத மௌனங்கள்"

"பிரிவுகளை காட்டும் காலங்கள்"

"உணர்வுகளை கூட்டும் நேரங்கள்"

"வெட்கத்தை மறந்த காதல்கள்"

"வெளிப்படும் நேரங்களில் கண்ணீர்கள்"

"நிழலை பிரிக்கின்ற ஒளிகள்"

"நிஜங்களை அறியும்போது வலிகள் "

"நட்பில் சேராத உருவங்கள் "

"நடுயிரவில் தேடுகின்ற பாதைகள் "

"உதவி செய்யாத கைகள் "

"உலகில் இடம்பெறாத உயிர்கள் "

"மகிழ்ச்சியை பெர்கெடுக்கும் நினைவுகள் "

"மற்றவர்களை மகிழ்விப்பதால் என்றென்றும் அழகுகள்"

"கற்று கொண்ட நண்பர்கள் "

"கண்ணீர் சிந்தும்போது முன்னே நிற்பவர்கள் "

"பாதையை மறக்காத உண்மைகள்"

"பாசம் மட்டும் இருக்கின்ற தாய்மைகள்"

எழுதியவர் : காந்தி. (7-Feb-14, 6:13 pm)
பார்வை : 241

மேலே