நிதர்சன உணர்வுகள்

சிதறி விழும் போதெல்லாம்
மண்ணிற்கு மழையாகவும்
எனக்கு மரணமாகவும்
என் அங்கலாய்ப்புகள் அர்த்தமற்றதாக/-

ஊர்கூடி இழுக்க
உற்சவமூர்த்தியாக
இழுத்த இழுப்பிற்க்கெல்லாம்
இசையும் அந்தோ பரிதாபம்/-

எனக்கான பாதைகளை
யாரொருவனொ வகுக்க
வசதியாக இருக்கிறதா என்று
வாய்கிழிய விசாரிப்புகள்/-

காலநிலையை கடமைக்கு சாட்சியாக்கி
ஓய்வை உலகிற்கு உணர்த்தும்
சொரணைகெட்டது இந்த சொர்க்கபூமி
சொகுசாய்வாழ்வதில் /-

சுகம் பல தேடி அகம் சில வெந்து
உதட்டில் புன்னகை ஏந்தி
உறவை வாழவைக்கும்
உன்னதம் கெட்டழிந்திடினும் /-

எழுதியவர் : bhanukl (9-Feb-14, 6:58 am)
பார்வை : 105

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே