உண்மையாகவே சொல்லுறேண்டி

உன் சிரிப்புல என்ன சிக்கவச்சு
சின்னா பின்னமா ஆக்கிபுட்ட

உன் பேச்சுல என்ன பத்தவச்சு
பைத்தியமா மாத்திபுட்ட

உன் கோமாளி தனத்தால
என்ன கொலைகாரி ஆக்கிபுட்ட

இப்ப, நார்மலா நீ மாறி
என்ன நஞ்சாக மாத்திபுட்ட

நல்லா இருத்த என்ன இப்ப
கல்லாக மாத்திபுட்ட

கொலைக்கும் அஞ்சாத என்ன
இப்ப கோழையாக ஆக்கிபுட்ட

தூக்கத்தை தொலைச்சிபுட்டு இப்ப
துக்கத்துல குளிச்சிபுட்டேன் உன்னால

இன்னும், என்ன செய்ய காத்திருக்க ????????????
எதற்காக என் நெஞ்ச விட்டு நீங்காமல்
நிலைச்சிருக்க .....

என்ன விட்டு நீ போனாலும்
உன் நினைவுகள் என்ன
நிலைகுலைய வைக்குதடி ....

சீக்கிரமா நீ போக என்
சிந்தனைய கேஞ்சுறேண்டி ......

மன்றாடி கேக்குறேன்டி
என் மூனளயில் இருந்து நீ போக ....

உண்மையாகவே சொல்லுறேண்டி
என் உள்ளத்தை விட்டு நீ போக ....

நா உயிர் வாழ, நீ நினைச்சா
என் உயிரை விட்டு நீ போய்டு ....

இத நா என் உதட்டால சொல்லல
உன்ன என் உயிராக நினைச்சதால சொல்லுரெண்டி....

எழுதியவர் : vasu (10-Feb-14, 12:22 pm)
சேர்த்தது : வாசு
பார்வை : 1568

மேலே