காமதேவனின் நேர்க்காணல்

எனது
மூன்றாவது தசத்தின்
வயது, விரதம் முடிக்க
விண்ணப்பம் ஒன்று
அனுப்பவைத்தது
காம தேவனுக்கு....!

விண்ணப்பம் படித்த
காமதேவன் என்னை
நேர்க்காணலுக்கு அழைத்தான்.


தேவன் :
நீ ரசிகனா ?
படைப்பாளியா?

ரசிகன் என்றேன்..!

எதை ரசிப்பாய் ?
என்றான்.
எதையும் ரசிப்பேன்
என்றேன்.

எதுவரை உன் ரசிப்பு?
வரையறை தெரியுமா?
வினவினான்

விளக்கம் கொடுத்தேன்.....

பதுமை இதழ் முதல்
இளமை மெட்டுக்கள் பாடும்
அழகிய மொட்டுக்கள் வரை.
நாசித்துளை ஏறிய மோகவாசம்
வியர்வையில் கழியும் வரை.
கழிந்த வியர்வையை என்
இதழில் சுவைக்கும் வரை.
சுவைத்த வியர்வை மிச்சத்தை
விரல்களால் தீண்டி மறுமுறை
முளைக்கத்துடிக்கும்
காதல் பதுமையவளின்
இதழ்தாளில் எழுதும்வரை..
இந்த இன்ப வரையரையில்
எந்த வரைமுறையில்லாமல்
எல்லை தாண்டும்
என் ரசனை
என்றேன்....!

அய்யய்யோ.....!
அச்சச்சோ....!
என்னையே வெட்கப்பட
வைக்கிறாயே...!
வெட்கப்பட்ட தேவன்
தொடர்ந்தான்.................

மன்மதனே !
நீ ரசிகன் அல்ல.
ஆக்கமுள்ள காதலுக்கு
ஏக்கமுள்ள படைப்பாளி..!

சான்றிதழ் அளித்து
சத்தியம் செய்தான்.

”உன்னவள் உன்னை
நாடி வரும் நாள்
குறித்துவிட்டேன்...!
அதுவரை
ஆண்மகனே....!
கற்போடு காத்திரு......!”

அறிவுறுத்திய தேவன்
வாழ்த்தி விடைப்பெற்றான்.


*****************************இரா.சந்தோஷ் குமார்

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார் (10-Feb-14, 4:38 pm)
பார்வை : 634

மேலே