காதல் - முதல் வெண்பா

பெற்றவனைப் பெற்றபெரும் பேறைக்கொண்டு
கற்றவனைக் காப்பியத்தில் ராமன் என்பர்,
விற்றவனை மரந்தரித்த காவியந்தன்னில்
கொற்றவனாம் கோமகன்தன் சிறப்பைச் சொன்னார்.!!

பூமிதந்த பூமகளாம் பூங்கொடியாள் சீதை -
சாமிதந்த பழிசொல்லைத் தாங்காஓர் பேதை
நேமியவன் கைப்பற்றி வனமேகியக் கோதை
ப்ரேமியவள் மேனியெழில் கூறிடுமோ காதை!!!

அன்னவன் தன்சிந்தையிலே காதல்கொண்டு –
மன்னவன் எனநாடழைக்க மறந்தானின்று
சின்னவனாம் தன்இளவல் அழைத்தானங்கு
பெண்ணவளை கண்டுவர விட்டான் தூது.!!


மொந்தையிலே வீழ்ந்த நறுந்தேனைப் போல-
மந்தைநடு மாவினைப் போல்கன்னிகை கண்டான்
முந்தைகண்ட பெண்டிரைஇனி கருத்தினில் வேண்டான்
சந்தைநடுத் தேரினைப்போல் மரமாய் நின்றான்.!!

பஞ்சுநிகர் மேனியெழில் பகர்ந்திட பாரில்
கொஞ்சுதமிழ் மொழியிங்கு வார்தைகள் தேடும்
மஞ்செனவே மங்கையவள் மருங்கைக் கொண்டு
விஞ்சுமலர் மென்மைதனை ஒருங்கே பாடும்!!

விண்ணையொத்த தேகம்என நீலவொளிசிந்தும்
கண்ணைஉற்று நோக்கிடிலோ மனம்மயக்கம் கொள்ளும்
மண்ணைஆள பிறந்தவனின் உளம்இனித் துள்ளும்
பண்ணிசைக்கும் பாவிசைக்கும் சொல்லவொனா இன்பம்

கண்டுவந்த காட்சியினை விண்டுவைக்க வார்த்தையின்றி
பெண்டெனவே தலைகுனிந்த தன்இளவல் கண்டு
துண்டெனவே சொல்லாயோ துடிக்கிறது நெஞ்சம்...
வண்டெனவே செல்கிறது மனம் அவளின்தஞ்சம்!!

என்னவென்று சொல்வதென்று தான்இளவல் நாண
பின்னவனின் வருணனைக்கு முன்னவனோ ஏங்க
சின்னவனின் முகம்எட்டிச் சின்னப்போர் தொடுத்தான்
கன்னமெல்லாம் சிவக்கஅவன் அண்ணனைத் தவிர்த்தான்!!

தாயென்று சொல்வேனோ அவள்எனைக் காக்கும்ஓர்
சேயென்று கொள்வேனோ அவள்நிகர் நோக்குங்கால்
நோயொன்று இருந்தாலும் நிற்காதோடும் நிலத்தில்
பாயென்று கிடப்பேனே அவள்கால் அடியில்!!

பாசத்தில் பின்னவனே ஆனாலும்என் முன்னவன்நீ
நேசத்தில் முந்திட்டாய் நீஉரைத்த உரையதனில்
வாசத்தில் வகைபெருக்கும் மலர்கள் நடுவில்என்
ஸ்வாசத்தை கண்டுவந்து எந்துயர் துடைத்தாய்!!

தேகத்தில்நான் கொண்ட பெருந்துன்பம் நீங்க
ரோகத்தில் வெளிப்போன என்னுயிரும் மீள
மேகத்தில் பொழிகின்ற மழையாய்க் கண்ணீர்
சோகத்தில் இருந்தவனை முழுதும் நனைக்கும்!!

மங்கையவள் மனம்கவர்ந்த வாழ்க்கைக் கொண்டாள்
கங்கையென பொங்கிவந்த மன்னன் கண்டாள்
கொங்கையது மண்ணில்பட வீழ்ந்தாள் நங்கை
இலங்கை வெல்இராமனிடம் பெற்றாள் பங்கை!!

எழுதியவர் : முரளிதரன் (11-Feb-14, 9:15 pm)
பார்வை : 140

மேலே