கைகளில் ஏந்தும்திய என் காதல்

காதல் எனை கையணைத்த போதினில்
நானே களவாடப்பட்டதை நானறியேன்
பூமி முழுதும் நடந்து விண்ணகத்தையும்
கிழித்துக்கொண்டு எங்கே என்கேயென்றே
என்னைதேடிடும் வேளையில் பாவை
உன்னில் இருப்பதை கண்டுகொண்டே
ஏக்கமிங்கே பலகோடி எனை ஏங்கவைத்த
உனைத்தேடி கண்கள் மூடி ஒருநிலையாய்
உதயமாகும் கனவுகள்யாவும், இன்பக்
கன்னி உன்னில் அடைக்கலம் கொண்டு
துடக்கம் தேடியே அஸ்த்தமிக்க நித்தம்
நேரம் காலம் ஏதுமின்றி பேசிகொண்டே
இருந்தாலும் உன் வார்த்தை சொல்லா
எண்ணற்ற புத்தம்புது அர்த்தங்களை
திரையில்லாது தெளிவாகவே உந்தன்
அழகிய கயல் விழிகள் சொல்லுதே
இன்ப ஆனந்தம் என்னுள்ளே துள்ளுதே

காதலை அனைத்தே என்றும்,,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்....

எழுதியவர் : அப்துல்ஹமீது(எ)சகூருதீன்.. (12-Feb-14, 5:51 pm)
பார்வை : 54

மேலே