சூரியோதையம்
நான் உன்னை முத்தமிடுகிறேன்
நீ விழித்தெழுகிறாய்...
உன் கருத்த கண்களால்,
மெளனித்த சூரியனுக்கு அனுமதி
தருகிறாய்...
தக தக என மின்னும்
ஒளிக்கீற்றுகள்
உன் பாதம் சரணடைகிறது....
என்னைப் போலவே...
எனக்குள் கர்வம்....
நான்
உன்னை முத்தமிட்ட பிறகே
உலகிற்க்கு வெளிச்சமாய்
சூரியோதையம்....ஆனதால்