எதனால்
கற்கண்டு கசந்தது பித்தத்தால் !
கன்னம் சிவந்தது முத்தத்தால் !
கல்வி சிறந்தது வித்தத்தால் !
கடவுள் உணர்ந்தது சித்தத்தால் !
கலகம் எழுந்தது யுத்தத்தால் !
கனவு கலைந்தது சத்தத்தால் !
கவலை அகன்றது சொந்தத்தால் !
கலக்கம் தெளிந்தது பந்தத்தால் !
கடமை மறந்தது மந்தத்தால் !
கவிதை பிறந்தது சந்தத்தால் !