காதலினால் செத்துப் பார்
கண்ணீரில் அவள் சிரித்தாள்
கண்ணுக்குள் இருந்தே களிநடனம் புரிகின்றாள்
அவள் உதிரத்தின் சுவையில்
கல்லொன்று சொல்லியது
என் பெயரின் உச்சரிப்பை
போதுமடா !போதுமடா! இந்தக் காதல்
என்று என் மனம் சொல்லினாலும்
காதலினால் அவள் நாமம்
கனவிலும் நா உச்சரிக்கிறது
கண்களின் ஈர்ப்பினால்
என் கண்ணீரில் அவள் சிரித்தாள்
கண்ணுக்குள் இருந்தே களிநடனம் புரிகின்றாள்
காதலுக்கு கண்ணில்லை
என்று மட்டும் சொல்லிடாதே
கண்ணில்லை என்றால்
இந்தக்காதலுமில்லை என்பதுதான் உண்மையடா !
போதுமடா!போதுமடா! இந்தக்காதல்
என்று என் மனம் சொல்லினாலும்
காதலினால் அவள் நாமம்
கனவிலும் என் நா உச்சரிக்கின்றது
தொட்டுப் பேசுவதா காதல்
இல்லை ! இல்லை !
கண்கள் பேசுவதுதான் காதல்
கண்ணீரில் அவள் சிரித்தாள்
கண்ணுக்குள் இருந்தே களிநடனம் புரிகின்றாள்
காதலினால் சாவதுதான் சரித்திரமென்பார்
உண்மைதான்!உண்மைதான்!
காதலினால் செத்துப்பார்!
நீயும் சரித்திரமாவாய்!!!!