காதலர் தினம்

காதலர் தினம்

வாழ்க்கையின் சோலைகளில்
உன் வாசங்களால் மட்டுமே
வாழ்ந்து கொண்டிருக்கும்
ஓர் வண்ணத்துப் பூச்சி நான்
என்று இது நாள் வரை
நான் நினைத்திருக்கிறேன்.............

உன்னிடம் மறைத்து வைக்கும்
என் நேசங்களை
என்றாவது ஒரு நாள்
நீ திறந்து பார்க்கும்
நாள் வரும் என்று
கண்கள் திறந்தே இதுநாள்வரை
நான் தவம் இருக்கிறேன்........

அதிர்ந்தும் அதிராமலும்
நீ உதிர்க்கும் ஒவ்வொரு
ஒற்றை புன்னகையிலும்
தொலைந்து தான் போகிறேன்.......
இருந்தும் உனக்கான தூரங்கள்
குறைந்து இன்னும் நெருக்கமாய்
என் அருகில் நீ...........

நீ இதழ்கள் விரித்து
உதிர்க்கும் ஒவ்வொரு ஒற்றை சொல்லிலும்
விழுந்து தான் போகிறேன்
என் தேவதையே.........
இத்தனை நாட்கள் நீ எங்கிருந்தாய்
என் இதயத்தின் வெற்றிடத்தை
இதுவரை நீ நிரப்பாமல் ...........

நித்திரைகள் சுத்தமாய் தொலைத்து
நிச்சயமாய் உன் நினைவுகள் மட்டுமே சுமந்து
நித்தம் நிரம்பும் என் நேச அணைகள்
வழிந்து உன்னிடம் வரக் கூடும்
அகலத் திறந்து வை
உன் இதய கதவுகளை..........

ஒரு அழகான நாளின்
இளமாலை பொழுதில்
இதுவரை நான் சேமித்திருந்த‌
என் காதல் கணக்குகளை
எல்லாம் தோரணங்கள் கட்டி
உன் முன் நான் அலங்கரித்தேன்....
பதில் முறையாய்
ஓர் அழகான‌ புன்னகை
ஒன்றை நீ சிந்தினாய்............

உன் புன்னகையின் அர்த்தங்கள்
தெரியாமல் நான் தவித்த பொழுது.....

உன் கைக்குள்
என் கைகள் பதிய வைத்து
சில நொடிப் பொழுதுகள் தவற விட்டாய்......

தொலைந்து போனவை இப்பொழுது
என் தவிப்புகள் மட்டும் அல்ல.....
சுற்றியிருந்த இந்த உலகமும்
என் இதயமும் கூட‌............

நேசத்தின் முடிவற்ற விரிவுகளில்
இன்று முதல் இனிதே தொடங்கட்டும்
முடிவுகளே இல்லாத
இந்த காதலர் தினம்.

இர.குமார்.

அனைவ்ருக்கும் காதலர் தின வாழ்த்துக்கள்

HAPPY VALENTINES DAY

எழுதியவர் : இர.குமார். (14-Feb-14, 12:47 am)
Tanglish : kathalar thinam
பார்வை : 192

மேலே