கனவு வீதிகளில்

உன்னிடம் சொல்லாத காதலை
நீட்டித்துக் கொண்டிருக்கிறது
கனவு வீதிகளில் இரவு!
உன்னிடம் பருகிடாத ஸ்பரிசத்தைப்
பறைசாற்றுகிறது பனித்துளி..,
பட்டும்படாமல் இலைகளில்!
நாம் பதியம்போட்ட
நமது கடற்கரை கால்தடங்களை
பிரிக்க எண்ணிய அலைகளுக்கு ஏமாற்றமே!
பிரிக்கமுடிந்தது நம் நிழல் மட்டுமே!
புணர்தலில்
இல்லயடி காதல் உணர்வதில்!
வெறும் சதை திரட்சியல்ல;
உனது மேனி
காதல் சிசுக்களை
ஈன்றெடுக்கும் அன்பின் கருவறை!