காதலோடு ஒரு வாழ்த்து - ஒன்று

இதயத்தில் காதல் வந்தால்
இறகில்லாமல் பறக்கலாம்....
இப்படி நான் சொல்ல வந்தால் - எனைப் பலர்
இடிச்ச புளி என்கலாம்......!
பாராட்டுகிறேன் அவர்களை - எனினும்
பட்டுத் தெளிவதுதானே பண்புள்ள அன்பவம்...?!
நானும் பறந்திருப்பதால் சொல்கிறேன்........
( மன்னிக்கவும் )
பறந்து கொண்டிருப்பதால் சொல்கிறேன்......
இதயத்தில் காதல் வந்தால்
இறகில்லாமல் பறக்கலாம்....
இதை காதலிப்பவர்கள் உணர்ந்து கொள்வர்
இதய காதலர் தின வாழ்த்துக்கள் (14.2.2014 )
ஒன்று சொல்ல மறந்து விட்டேன்
என் காதல் யார் என்று சொல்லவில்லையே.....
மீராவுக்கு கண்ணனைப் போல்
எனக்கு நம் தமிழ் மொழி
இப்போது சொல்லுங்கள்
இதயத்தில் காதல் வந்தால்
இறகில்லாமல் பறக்கலாம்....
என்று நான் கூறியது சரிதானே......