சாபம்-10

வந்தவன் அழைப்பு மணியை அழுத்த அருணும் மனோகரும் வாசல் பக்கம் பார்த்தனர்,,, அவனுக்கு 28 வயது இருக்கலாம் சரியான உயரம் நாகரிகமாக உடை அணிந்திருந்தான்

அவனை கண்டவுடன் முகம் மலர்ந்தார் மனோகர்,,,

"வா அசோக்"

"குட் ஈவ்னிங் அங்கிள்!! என்ன அங்கிள் இவ்ளோ அர்ஜெண்டா வர சொல்லிருக்கீங்க??"

"ஆமா அசோக் ரொம்ப முக்கியமான விஷயம் அதான்"

அவர்கள் பேசி கொண்டிருந்தார்கள்,,, அருண் ஒன்றும் புரியாதவனாய் அவர்களை பார்த்து கொண்டிருந்தான்

"அசோக் இது அருண்,,, என் கூட இருக்கான் என் பையன் மாதிரி"- அறிமுகம் செய்து வைத்தார்

"அருண் இது அசோக் என் சித்தி பொண்ணு ஒருத்தவங்க இருக்காங்கன்னு சொன்னேள அவங்களோட பையன் கிரைம் பிரஞ்ச் ல இருக்கான்"


"ஹலோ"- கை நீட்டினான் அசோக்

"ஹலோ" - கை கொடுத்தான் அருண்

"ஓகே அங்கிள் என்ன விஷயமா என்ன வர சொன்னீங்க???"

"இரு அசோக் அருண் அசோக் க்கு சாப்ட எதாவது கொண்டு வா"


தன்னை ஒதுக்குவது எதற்கென்று யோசித்தான் அருண்,,, அவனுக்கு புரிந்து விட்டது

சமையல் அறையிலிருந்து இவர் பேசுவதை கவனித்தான் அருண்,,,, மனோகரனின் பேச்சில் அந்த காடு அடிபடவே தன் தலையில் அடித்து கொண்டான்

"ம்ஹும்,,, இவர் திருந்தவே மட்டாரு" -மனதிற்குள் நினைத்து கொண்டான்


கையில் கோப்பை யோடு ஹாலுக்கு வந்தான் அருண் அதற்குள் நடந்த யாவற்றையும் அசோக்கிடம் சொல்லி ஒரு முடிவிற்கும் வந்துவிட்டனர் இருவரும்

அதை அருணிடம் சொன்னார்கள்,,,,,,,,


"அருண் நீ, நான் , அப்பறம் அசோக் மூணு பெரும் வெளியூர் போறோம் போக தயாராயிடு"- கட்டளை போல் சொன்னார் மனோகர்

"எங்க சார் ???" - தெரியாதவன் போல கேட்டான் அருண்


"ம்ம்ம்,,,, சொர்ணகாடு"


அவர் சொன்ன நேரம் அவரின் வீட்டு தொலை பேசி அடித்தது,,,,,,,,,,

அருண் சென்று எடுத்தான்,,,,,,,,,,,,,,,,,

அதில் இருந்த செய்தி கேட்டு உறைந்து போனான் அருண்,,,,,,,, கையிலிருந்து தொலைபேசி வாங்கி நழுவ அப்படியே சரிந்தான்


(விரட்டும்,,,,,,,,,,,,,,,,,,,)

எழுதியவர் : நிலா மகள் (14-Feb-14, 3:08 pm)
பார்வை : 452

மேலே