காதலர் தினம்

காதலர் தினம் உலகே மகிழ்ச்சி வெள்ளத்தில்,,, சிலரோ சோகத்தில்,,, பலரோ போதையில்,,,, இப்படியாக ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம்,,,,

உலகில் முதலில் தோன்றி இன்று வரை மருந்து கண்டு பிடிக்காத,, மருந்து கண்டு பிடிக்க விரும்பாத ஒரே "வைரஸ்" காதல் தான்,,,,

சட்டேன்று தொற்றி கொள்(ல்)ளும்,,,,, ஆனால் காதல் தினம் கொண்டாட மட்டும் ஆட்களுக்கு பஞ்சமில்லை,,,,,,,,,,,,,,,

இப்படி பல யோசனைகளோடு அந்த பரிசு பொருள் கடைக்குள் நுழைந்தான் சித்தார்த்,,,,,,,,

வேறெதற்காக தன் காதலிக்கு காதலர் தின பரிசு வாங்கி தர தான்,,,,,,,,

மனம் ஏனோ அதில் உடன் படவில்லை,,,,,,, வழக்கமான காதல் கதை தான்,,,,,,,, காதலில் ஒரு இளைஞன் படும் எல்லா அவதியும் பட்டுவிட்டான்

"தன் நிலைக்கு காதலர் தினம் தான் ஒரு கேடு"- அவனை அவன் மனமே பரிகசித்தது,,, பின் போய் தொலை,,, எதாவது வாங்கி கொடு,,, இல்லையென்றால் மீண்டும் அவளின் படையெடுப்பு தொடரும் நீ என்னை தான் இம்சிப்பாய் என்று மனம் பச்சை கொடி காட்ட அதன் விளைவாய் இப்போது அந்த கடையில் அவன்,,,,,,,,,


வரிசையாக ஒவ்வொரு பொருளாய் பார்த்து கொண்டே வந்தான்,,,,,,,,, பல வகையான வாழ்த்து அட்டைகள்,,, சிறப்பாகவே இருந்தது,,, ஆனால் அவள் காதல் தான் "விலை"உயர்ந்ததாயிற்றே ,,, இதற்கெல்லாம் மசியுமா??


ம்ஹும்,,, அடுத்த பொருள் நோக்கி பார்வையை செலுத்தினான் பலவாறாக பொம்மைகள் பெண்ணிடம் ஆண் காதலை சொல்வது போல,,, பெண்ணுக்கு ஆண் பரிசளிப்பது போல,,,,,, அது சரி பொம்மையில் கூட ஆண் தான் கொடுக்க வேண்டுமோ ???

இது ஆணுக்கு எழுத படாத விதி போல என்றெண்ணி கொண்டான்,,,, அடுத்து என்ன இருக்கிறது பார்த்து கொண்டே வந்தான்

சட்டேன்று ஒரு இடத்தில் சிலையாகி நின்றான்,,,
எவ்வளவு அழகான பொம்மை விலையும் இவன் காதலுக்கு ஏத்த விலை தான்

அது ஒரு பெண்ணிடம் ஆண் காதலை வேண்டுவது போல இல்லை,,,, ஒரு பெண்ணும் ஆணும் சரிசமாக தன் காதலை பரிசை தருவது போன்று இருந்தது

சித்தார்த்க்கு அந்த பொம்மை மிக பிடித்து போனது,,, அதை கையில் எடுத்தான்,,, நேரே பணம் கட்டும் இடத்திற்கு போனான்

"இதை பேக் பண்ணுங்க" -என்றான்

"சாரி சார் இத ஏற்க்கனவே ஒருத்தர் ஆர்டர் பண்ணிட்டாரு "

இந்த பதிலை கேட்ட உடன் அவன் முகம் மாறியது,,, இருந்தாலும் அவன் விடவில்லை

"இதுல வேற பிஸ் இருக்கா"

"சாரி சார் இது ஒன்னு தான் இருக்கு"

அவன் என்ன செய்வதென்று யோசித்தான்

"சரி இதோட விலையைவிட நான் ரெண்டு மடங்கு பணம் தரேன் இத எனக்கு கொடுத்துடுங்க "- என்றான்.,,, எப்படியும் அந்த பொம்மையை வாங்கியே தீர வேண்டும் என்ற உறுதி தெரிந்தது அவனிடத்தில்,,,,,,,,,


"அது இல்லை சார்! அவர் ரெகுலர் கஸ்டமர் ,,,,நீங்க வேணும்-னா அதோ இருக்காரே எங்க ஓனர் அவர்கிட்ட கேட்டு பாருங்க"- என்று சொல்லிவிட்டு ,அடுத்த வாடிக்கையாளரை பார்க்க சென்றுவிட்டான் கடை ஊழியன்,,,,,,,,,

"யாரது என்று திரும்பி பார்த்தான் சித்தார்த்

அங்கே 50 வயது மதிக்க தக்க ஒரு மனிதர் நின்று அங்குள்ள பொருட்களை பார்வைட்டு கொண்டிருந்தார்

அவருடன் சென்று இந்த பொம்மை தனக்கு வேண்டும் என்று கேட்டான்

அவர்"இல்ல தம்பி இத கொடுக்க முடியாது நீங்க வேற ஏதும் வாங்கிகோங்க" என்றார்

"இல்லை எனக்கு இது தான் வேணும் ப்ளீஸ் இத யார் வாங்கினது அவங்க இருந்தா சொல்லுங்க நான் பேசுறேன் அவங்கள்ட" என்றான்

சற்று நேரம் அவன் முகத்தையே பார்த்தார் அவர்,,,
பின் "சரி தம்பி , அவர் என் நண்பர் தான்.,,, ஆனா அவர் இங்க இல்ல நான் வேணும்னா அவர் வீட்டு அட்ரெஸ் தரேன் நீங்க போய் பாருங்க" -என்றார்

"அது சரி ஒரு பொம்மைக்காக அவர் வீட்டை தேடி நான் போகணுமா??"

"அது உங்க இஷ்டம் தம்பி "- சொல்லிவிட்டு அவரின் விலாசத்தை கிறுக்கி அவன் கையில் திணித்து விட்டு சென்றுவிட்டார்


அவருகென்ன மிக சுலபமாக சொல்லிவிட்டார் ,,, இவனுக்கல்லவா தெரியும் இவன் நிலை,,,, வேறு வழி இல்லை இது தான் தனக்கு வேண்டும் என்று முடிவெடுத்தான்,,, தன் காரை கிளப்பினான்


அந்த மலை பாதையில் காரை செலுத்தி கொண்டிருந்தான்,,,, சுற்றி இயற்கை,,,, பசுமை

அந்த விலாசத்தை தேடி சென்றான்,,,, கொஞ்சம் தூரம் தான்,,,, அதிலிருந்த பெயரை பார்த்தான் "சந்திரபிரகாஷ்"

வழியில் ஒரு குதிரை ஒன்று வேகமாக வந்தது விலாசத்தை பார்த்து கொண்டே வந்தவன் நிலைகுலைந்தான்,,, அவன் சிறுமூளை பெருமூளையை பிடித்து பிரேக் அடிப்பதற்க்குள் ஒரு மரண போராட்டமே அடி விட்டது அவன் இதயம்

வழக்கம் போல இவன் செய்த தவறை அந்த குதிரையின் மீது போட்டான்

அந்த குதிரையின் மேலிருந்தவர் கொஞ்சம் கூட கோபம் கொள்ள வில்லை,,, பொறுமையாக இறங்கி வந்தார்,,,


அவருக்கு 40 தலிருந்து 55 வயதிற்குள் இருக்கலாம்,,,, சேமியா தலை,,, அது மீசையும் விடவில்லை அங்கும் வெள்ளையனின் காலனி ஆதிக்கம்,,,,,,,,,,

நல்ல புஜம்,,,, ஆஜானுபாகுவான தோற்றம்,,, பல ஞானங்கள் கண்ட கண்கள்,,, இதை எல்லாம் தாண்டி ஒரு கம்பீரம்


அவரின் அழகையும், ஆண்மையையும் பார்த்த சித்தார்த்திற்கு அடுத்த வார்த்தை வரவில்லை
அமைதியானான்,,,


அவர் பேச ஆரம்பித்தார்,,,,,,,, "என்னப்பா ஏன் இவ்ளோ கோபம்"- அமைதியான யாரையும் வசியம் செய்யும் அன்பு என்னும் போதை கலந்த கனிவு அவர் பேச்சில்,,,,,,,,,,,

"என்ன??? யாருப்பா நீ? உன்ன இதுக்கு முன்னாடி நான் இங்க பாத்தது இல்லையே"


"நான் இங்க ஒருத்தர பாக்க வந்தேன்"

"யாரை? ஏன் கேக்குறேன நான் இங்க 30,40 வருசமா இருக்கேன்,,, எனக்கு இங்க எல்லாரையும் தெரியும்"

"சரி அட்ரெஸ் தேடி அலைய வேண்டாம்"- மனதிற்குள் முடிவு செய்து அந்த விலாசத்தை நீட்டினான்

வாங்கி பார்த்தார்,,,,,,,,,,,, சிரித்தார்

"ஒ! இந்த வீடா இங்க பக்கத்துல தான் இருக்கு வா நானே உன்ன கூட்டி போறேன் என்றார்,,,"

அந்த மலை பகுதியில் தன் காரை பூட்டி வைத்து விட்டு அவர் பின்னால் தொடர்ந்தான் சித்தார்த்

"ஆமா நீ அவருக்கு என்ன வேணும்?"

"எனக்கு அவர் சொந்தம்லம் இல்ல"

"அப்பறம் எதுக்கு அவர தேடி வந்துருக்க"

"அது வந்து,,,,, லவர்'s daykku என் கேர்ள் friendkku ஒரு கிபிட் பாத்தேன்,,, அது இவர் செலக்ட் பண்ணுனதுன்னு சொன்னாங்க அத நான் எடுத்துக்குறேன்'nu சொல்லிட்டு போக த்தான் வந்துருக்கேன்"

இதை கேட்ட நொடி பலமாக சிரித்து விட்டார் அவர்,,,

"என்னபா இது போயா இத்தன கிலோ மீட்டர் வந்துருக்க,,, அங்கயே வேற கடைல பாத்துருகலாம்ல,,, இல்ல வேற பொருள் வங்கி இருக்கலாம்ல"


"இல்ல எனக்கு இது தான் வேணும்"

அவர் மௌனமாக சிரித்தார்,,,,,,,,,, "இது தான் பா அந்த வீடு,,,,,,,, சரி நான் வரேன்" - சொல்லிவிட்டு சென்று விட்டார்


கதவை தட்டினான் சித்தார்த்,,,, 50, 52 வயது மதிக்க தக்க பெண் ஒருவர் கதவை திறந்தார்,,,,

"யாருப்பா நீ??"

"என் பேரு சித்தார்த்"

"என்ன வேணும் உனக்கு"

"நான் மிஸ்டர், சந்திரபிரகாஷ்-ah பாக்கணும்"

"அப்படியா உள்ள வா"

உள்ளே சென்றான்,,,,,


"இதோ இருக்கார்" -அவர் கை நீட்டிய திசையில்
படத்தில் ஓவியமாய் மாலைகளுடன் கம்பீரமாய் நின்றார் மேஜர் சந்திரபிரகாஷ்,,,,,

இவன் நினைவு,,,,, அந்த குதிரையில் பார்த்த முகமல்லவா இது என்றது,,,,,,,,,,


அதிர்ந்தான்,,,, அப்படியே சோபாவில் விழுந்தான்,,,,

அவன் தன் நிலை அறிய சில நிமடங்கள் தேவை பட்டது

"அப்போ அந்த கிபிட்!!!"

"எது??"

"லவர்'s டே,,,,,,,,,,,," அதற்க்கு மேல் ஏதும் தோன்றவில்லை கேட்கவும் பேசவும்


அந்த மூதாட்டி விளக்க ஆரம்பித்தார்,,,,,,,,,,

"நானும் என் ஹுச்பண்டும் லவ் மேரேஜ் பண்ணிகிட்டோம் அவர் ஆர்மி-ல இருந்தாரு ஆனாலும் ஒவ்வோர் லவர்'s daykkum எனக்கு ஒரு கிபிட் தவறாம வரும் அது அவர் ஏற்ப்பாடு,,,, 10 வருஷத்துக்கு முன்னாடி அவர் இறந்து போயிட்டாரு ஆனாலும் அவர் பேர் சொல்லி அந்த கிபிட் எனக்கு வந்துட்டு தான் இருக்கு,,,, அது அவரோட "சிம்பிள் ஆப் லவ்" " -சொல்லி முடிப்பதற்குள் பனி சூழ்ந்திருந்தது அவர் கண்ணில்,,,,


எல்லாவற்றையும் கேட்டு விட்டு வெளியே வந்தான் சித்தார்த்,,,, இனி அந்த பரிசு இவரை தான்
சேரவேண்டும் ,,,, முடிவெடுத்தான்


அங்கிருந்து தன் கார் இருக்கும் இடம் நோக்கி வந்தான் அங்கே அந்த கடையில் அதிபர் நின்று கொண்டிருந்தார்


"என்ன தம்பி பாத்தீங்களா?"

இவனுக்கு என்ன பதில் சொல்வதென்றே தெரியவில்லை ,,,,

"நான் ஒன்னு கேக்கலாமா?"

"கேளு தம்பி"

"சந்திரபிரகாஷ் சார் உயிரோட இல்ல,,,, யார் அவர் பேர்ல கிபிட் அனுப்புறது "

"நான் தான் தம்பி "

"நீங்க யாரு அவருக்கு ,,, நீங்க ஏன் அவர் பேர்ல அனுப்பனும்"

இந்த கேள்வி கேட்டதும் அவனை ஏறிட்டு பார்த்தார் அந்த மனிதர்,,, பின் பேச தொடங்கினார்


"என் பேர் விஸ்வநாதன்,,,, நானும் சந்திரபிரகஷும் ஒண்ணா தான் ஆர்மி ல இருந்தோம் அந்த இருந்தப்ப சந்துரு ஒவ்வொரு "காதலர் தின"த்துக்கும் அவன் மனைவிக்கு எதாவது பரிசு அனுப்புவான்,,,, அப்போ மட்டும் இல்லை வேலை முடிந்து இங்க வந்து இருந்தப்ப கூட அவன் மனைவிக்காக நிறைய பரிசு கொடுத்துருக்கான்,,,
அந்த அளவுக்கு அவன் மனைவி மேல அவனுக்கு காதல் இருந்தது,,,,,,,,,,

நான் அவனுக்காகவே இந்த கிபிட் ஷாப் திறந்தேன்,,, எந்த பொருள் புதுசா வந்தாலும் அதை அவன் மனைவிக்குனு வாங்கிட்டு போய்டுவான்,,, அப்படி ஒரு நாள் அதுவும் ஒரு காதலர் தினத்தப்ப தான் நானும் அவனும் போன கார் accident ஆயிடுச்சு ,,,,

அந்த இடத்துலயே அவர் உயிர் பிரிஞ்சிடுச்சு,,,,
அவன் சாகுரத்து முன்னாடி அந்த பரிசை என் கிட்ட கொடுத்து இத "தவறாம காதலர் தினத்துக்கு " என் மனைவிக்கு கொடுன்னு சொன்னான் ,,,

அதிலிருந்து ஒவ்வோர் காதலர் தினத்திற்கும் நான் கடைக்கு வர புது பொருளிலிருந்து ஒன்னை அவங்களுக்கு கொடுத்துடுவேன்"- என்று சொல்லி முடித்தார்

சித்தார் ஏதும் பேச வில்லை,,,,

அவர் மெல்ல நடக்க ஆரம்பித்தார் ,,,, சித்தார்த்தும் அவர் பின் தொடர்ந்தான்

அவர் வழக்கம் போல அந்த வீட்டின் முகப்பில் "சந்திர பிரகாஷ்"கிபிட் என்று பெயரிடப்பட்ட அந்த பொம்மையை வைத்துவிட்டு அழைப்பு பொத்தானை அழுத்திவிட்டு சென்றுவிட்டார்,,,,

சித்தார் அங்கயே நின்றிருந்தான்

அந்த மூதாட்டி வெளியே வந்தார் அந்த பரிசு பொருளை பார்த்தார் அதை என் நெஞ்சோடு அணைத்து கொண்டார்

அவர் உதடுகளில் அசைவு

" I LOVE YOU TOO SANTHURU"

காதல் என்பது மரணம் வரை அல்ல,,,,,,,,,,,
காதலுக்கு முடிவும் இல்லை,,,,,,,,,,,
காதலுக்கு வரைமுறையும் இல்லை,,,,,,,,
காதலுக்கு வயதும் இல்லை,,,,,,,,,,,,

எழுதியவர் : நிலா மகள் (14-Feb-14, 4:15 pm)
Tanglish : kathalar thinam
பார்வை : 601

மேலே