அன்னையை சுமப்பதும் சுகமே

வயிற்றில் சுமந்து பின்
இடுப்பில் சுமந்து நீ
ஓடும் இடமெல்லாம்
கூடவந்தே உணவளித்து
கனிவோடு உன்னை
அரவணைத்து அன்பை மட்டும்
எல்லையில்லா அள்ளித்தந்து
இன்னல்களை தான் சுமந்து
இன்பமட்டுமே உனக்குதந்து
காலம் கொஞ்சம் கடந்துவிட
நரைவிழுந்து நாடி தளர்ந்த
அன்னையவளுக்கு உன் வீட்டு
தின்னையிலுமா இடமில்லை
பெற்றெடுத்த பெற்றோரை
பெருவழியில்விட்டுவிட்டு
பெருமை பேசி திரிகின்றாய்
பிறப்பென்றால் அங்கு
இறப்பும்முண்டு இடைபட்ட
காலம் தன்னில் அய்யகோ
ஏனிந்த அரக்ககுணம்
வாழைக்கு கீழ்கன்று என்றும்
வையகத்தில்உள்ளதென்றால்
வருமுதுமை நாளையுனக்கு
மறந்ததை வாழாதே மனிதமதை
கொல்லாதே சுமையென்று
நினையாது சூளுரை இன்றோனும்
வயிற்றில் சுமந்தவளுக்காய்
நாம் கொடுக்கும்பெரும்பரிசு
அவர்தம்மை அ(ழவிடா)ளவிலா
அன்போடு அரவணைத்து அவர்
வயோதிகத்தில் நாம் சுமப்பதுவே ,,,,


கண்ணீரோடும் கணத்த இதயத்தோடும் ,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்.....

எழுதியவர் : அப்துல்ஹமீது(எ)சகூருதீன்.. (14-Feb-14, 9:03 pm)
பார்வை : 1418

மேலே