யோசித்தால்யோசிக்க வைப்பவை 12
![](https://eluthu.com/images/loading.gif)
பிறருக்கு நான் யார் என்பதை நிருபிப்பதே
நமது வாழ்க்கையாகி போகிறது
அறிவுடையவனுக்கு ஒரு வழி
இல்லாதவனுக்கு எல்லாமே வழி
பெயர்தான் நமக்கான தரத்தின் ISI முத்திரை
காத்துக்கொள் கண்விழித்து
உனது அறியாமையை உனக்கு அறிவிக்க
கல்வி அவசியமாகிறது
கற்றுக் கொடுக்க துணிந்தால் நீயும்
கற்க ஆரம்பிக்க வேண்டும்
அறிவுரை அளவுக்கு மீறினால்
குழப்பம் கூரை வேயும்
தலைவிதி என்று தம்பட்டம் அடிப்பது நீ தவறிய
கடமைக்கான பின்விளைவே
தேவையில்லாத பயிரை பயிரிடுவதைவிட
காலிநிலமாக இருப்பதே நல்லது
மதிக்க தெரியாதவனுக்கு கிடைத்த மகுடமும்
மண்ணாங்கட்டியும் ஒன்றுதான்
ஒன்றை விரும்புகிறோம் அல்லது வெறுக்கிறோம்
அதன் உள்பயனை தெரியாமலேயே
புகழுக்கு அடிமையானால் புகழ்பவனின்
கூண்டுக் கிளியாகி விடுகிறோம்
எதை அதிகமாக வெறுக்கிறோமோ
அது உன்னை பலமுறை தேடிவரும்