முயன்று தொடுவோம்
முனங்கியவர் தொட்டனர் தகரங்கள்,
முயன்றவர் தொட்டனர் சிகரங்கள்;
'முயல், ஆமை' கதை இனி அதை தவிருங்கள், 'முயலாமை' அதை விட்டேன் எனப் பகருங்கள்;
முதலில் நல்லமுடிவு எடுப்போம்,
முடிவில் நம்ம 'முதலை' எடுப்போம்;
முடிவில்லா தொடரை எழுதிடுவோம்,
முத்தான நல்ல முடிவைத் தொட்டிடுவொம்.