மகரந்த பூக்கள்

பூத்திருக்கும் மல்லிகை பூ வாசம்.....
புன்னகையில் இதயம் பதறும் நேரம்...
பால் நிலவை செதுக்கி வரும் பாவை.......
பக்கத்தில் வந்தால் இரு இதயம் கொதிக்கும் வேளை...
நெற்றியில் கணவனை நித்தம் கொண்டு..
மல்லிகை பூ வெட்கத்தை முகத்தில் கொண்டு..
கழுத்திலே கணவனை இறுக்கி கொண்டு..
கன்னி வரும் வேளை கால் சலங்கை அசையா நடையை கொண்டு....
வாழ்க்கயின் முதல் தொடக்கம் தொடங்க போகிறது..
வாழ்க்கயின் காதல் பயணம் தொடப்போகிறது....
நிலவொளி வெட்கத்தில் மறையப்போகிறது...
நனையா மழை இன்று நனைய போகிறது ...
காத்திருக்கும் மணமகன் கோவலனாக....
இனி என்றும் அவள் வாழ்வில் காவலனாக....
சிங்கம் கண்டிராத மானின் குணத்தை காண போகிறான் .....
இரு சூரியன் சுட்டெரிக்கும் வெட்பத்தை உணர போகிறான்.....
இரவு பகல் இரண்டும் அறியா நான்கு கண்கள்..
இருட்டில் புரிந்து கொள்ளும் இதய மீன்கள்...
இதுவரை கண்டிராத பூச்சுடல் இரண்டு ..
பூப்பூக்கும் நேரம் ஒன்று சேர்ந்து ......
உலகத்தின் மொத்த மூச்சு காற்றும்...
சுவாசிக்காமல் போனதில்லை இந்த இரவு..
உலகமெல்லாம் காதல் பரிமாற்றம் ...
ஊருக்கு தெரியும் இந்த காதல் பரிமாற்றம்...