மரம் பேசுகிறேன்
பேசுகிறேன் !பேசுகிறேன் !
ஆம் ! மரம் பேசுகிறேன் ...!!!
என்னை விதைத்தவர் யாரோ ?
நான் அறியேன் ....அது
ஆநிரைகளோ அல்லது
பறவைகளாகவோ இருக்கலாம்
கண்டிப்பாக மனிதனாக இராது ..........
நான் முளைவிட்டு
நுனி மொட்டுக்கொண்டு
கொழுந்துடன் வளர ஆரம்பித்த நேரம்
தண்ணீர் இல்லாமல்
தள்ளாடியபடி தவித்தேன் .......
நிலத்தடி நீரோ ஆற்றுநீரோ
ஊற்றுநீரோ எதுவும் இல்லை
விண்ணில் உலாவும் செயற்கை
கோள்களால் பருவமழையும்
பொய்த்துப் போனது ...........
என் கிளைகளும் இலைகளும்
வெம்மையால் கருகி
வெகுஅளவில் வாடி வதங்கிப்போனேன்
உலகுக்கு உதவும் எண்ணத்தில்
உள்ள உறுதியுடன்
எப்படியோ வளர ஆரம்பித்தேன் ......
ஒரு பெரும் விருட்சமாகி
புதுப் பொலிவுடன்
புன்னகைப் பூத்தேன்
பறவையினமும் விலங்கினமும்
தங்கும் சமத்துவப்புரமானேன்.....
பாதசாரிகள் களைப்புடன் நின்றால்
பாசத்துடன் சாமரம் வீசுவேன்
மழலைகளைப் பார்த்தால்
மன மகிழ்ச்சியுடன் தலையாட்டுவேன்
பெரும் மழையோ வெள்ளமோ
மண்ணரிப்பு நேராவண்ணம் பாதுகாத்தேன் .
வருவோர்க்கும் போவோர்க்கும் .
மழை நாளிலும் வெயில் நாளிலும்
நிழற் குடையானேன்......
சாலையோர வாசியாக
சந்கீதம்பாடி வாழ்ந்த என்னை
அகலப்பாதை போடவேண்டி
அவசரம் அவசரமாக
வேண்டிய அளவுக்கு வெட்டி வெட்டி
வேரோடு வீழ்த்தினார்கள் .......
வேதனையோடு நான் சாய்ந்தேன்
என் மெய்யின் ஈரம் உலரும் வரை
வலிதாங்கி மௌனியானேன்............
மலர் தந்து மணம் தந்து
கனி தந்து வீடலங்கரித்து
நிழல் தந்து உரமாகி என்றும்
நீங்காமல் நான் காப்பேன் ...........
வெம்மை தவிர்த்து குளிர்ச்சியுடன் காத்து
ஓசோனின் ஓட்டையை தவிர்த்து
ஓய்வின்றி உழைக்க நான் இருந்தும்
ஒதுக்குவதும் ஏனோ எம்மை ....
வீடுதோறும் எம்மை வளர்த்தால்
வீணில் உருவாகும்
வீண் மாசுக்களை தவிர்த்து
விரும்பிய ஆக்சிஜனைப் பெற்று
விழிப்புடன் வாழ வழிசெய்வேன்........
நாடும் வீடும் நலம்பெற நல்
உள்ளங்களே ............
உலகை காத்திட
உயிரென எம்மை காத்திடுங்கள் ....
எதோ ஒரு வகையில்
...
.
..