செல்லாத காதல்

பிள்ளைக் காதலி உன்
கிள்ளை மொழி கேட்டு
கொள்ளை காதல் கொண்டேன்
வெள்ளை மனதோடு
பிள்ளை நீ பழக
கள்ள மனதோடு என் காதல்
சொல்ல நான் தயங்கி
உள்ளே வைத்து உருகினேன்
சொல்லாத காரணத்தால்
செல்லாததாகிப் போனது என்
செல்லக் காதல்

எழுதியவர் : தமிழச்சி தலைமகன் (16-Feb-14, 12:45 am)
சேர்த்தது : thamizhachi thalaimagan
பார்வை : 332

மேலே