thamizhachi thalaimagan - சுயவிவரம்

(Profile)



வாசகர்
இயற்பெயர்:  thamizhachi thalaimagan
இடம்:  திண்டுக்கல்
பிறந்த தேதி :  25-Jun-1985
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  24-Nov-2013
பார்த்தவர்கள்:  71
புள்ளி:  8

என்னைப் பற்றி...

வேல் கொண்டு விரட்டினாலும் அவள்
தாள் கண்டு பணிவேன் -என்
தாய்த் தமிழ் வாழ்க வென்று

குத்துப்பட்டு குருதி கொட்டினாலும்
சத்தமிட்டு முழங்குவேன்
சுத்தத்தமிழ் வாழ்கவென்று

உயிர் துறக்கும் தருணத்திலும் நான்
உச்சரித்து அடங்குவேன்-என்
அன்னைத்தமிழ் வாழ்கவென்று

என் படைப்புகள்
thamizhachi thalaimagan செய்திகள்
thamizhachi thalaimagan - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Feb-2014 12:45 am

பிள்ளைக் காதலி உன்
கிள்ளை மொழி கேட்டு
கொள்ளை காதல் கொண்டேன்
வெள்ளை மனதோடு
பிள்ளை நீ பழக
கள்ள மனதோடு என் காதல்
சொல்ல நான் தயங்கி
உள்ளே வைத்து உருகினேன்
சொல்லாத காரணத்தால்
செல்லாததாகிப் போனது என்
செல்லக் காதல்

மேலும்

thamizhachi thalaimagan - படைப்பு (public) அளித்துள்ளார்
16-Feb-2014 12:29 am

கிறுக்கல்களையும் குழறல்களையும்
கோடிப்பேர் சார்ந்துகொண்டு
இனித்திடும் மொழியென்பார்
இன்பக்கூத்தாடிடுவார்
பழைமை வாய்ந்ததென்பார்
போலிச்சரித்திரமாய் பிரிவே தமிழென்பார்
இசையெனும் பெயரினாலே ஓர்
ஈனசுரத்தினிலே முழங்கிடுவார்
பாட்டும் இயற்றிடுவார் அது பெரும்
பாவம் என்றுணராமலே
அறிவார் தமிழர் அறியாமையால் பிதற்றும்
அவரே மூடரென்று

தமிழொன்றே மொழி பிறிதெல்லாம் ஒலி.

மேலும்

மிக நன்று... 17-Feb-2014 6:54 pm
உங்கள் தமிழ் மொழி பற்று போற்றத்தக்கது ... ஆனால் பிற மொழிகளை ஒலி என்று சொல்லி விட்டீர்களே ... ஒவ்வொரு மொழிக்கும் ஓர் அழகும் சிறப்பும் உண்டு ! காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு போல ... தமிழ் பல மொழிகளுக்கு தாய் தமிழ் பல பல சிறப்பும் தொண்மையும் கொண்டது ! முதுமொழி மதுமொழி எல்லா மொழியும் ஒலியின் வழியே ...... உங்கள் தமிழ் பற்று வாழ்க ! 16-Feb-2014 5:59 am
thamizhachi thalaimagan - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Nov-2013 3:16 am

காற்றைப் பிடித்து காணல் நீரில் நணைத்து
இரவு வெயிலில் எளிதாய் காயவைத்தேன்
மேகத்திலேறி மெதுவாய் பயணித்து
இந்திரனுக்கு இனிதாய் பரிசளித்தேன்
அவன் இடியும் மின்னலும் ஈங்கொரு புயலும்
வழியும் புன்னகையுடன் எனக்கு வழங்கினான் பெற்றுக்கொண்டு நன்றியுரைத்தேன் - பின்
மழைத்துளியின் மையம் பற்றி விரைவாய்
வந்து சேர்ந்தேன் வீட்டிற்கு.

மேலும்

மிக்க நன்றி 25-Nov-2013 11:16 am
நன்றி நண்பரே 25-Nov-2013 11:14 am
நன்று 24-Nov-2013 4:01 pm
கற்பனை இன்னுமின்னும் விரியட்டும்! 24-Nov-2013 9:02 am
thamizhachi thalaimagan - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Nov-2013 2:48 am

தோழர்களே,
நம் உழைப்பினில் பிறர் பிழைப்பதே வாடிக்கை
அட்டைப்பூச்சிகளின் மத்தியிலே நம் வாழ்க்கை

திட்டங்கள் பல போட்டு பட்டங்கள் பெற்றாலும்
கொட்டியதில் கெட்டளவாய் கிட்டுவதே வருமானம்
மாட்டின் கூளமே மாதச்சம்பளமாம்

மிஞ்சுவதெல்லாம்
பசிமறவா வயிறும் பகல் பிரியா உயிரும்
மாற்றிடுவோம் இந்நிலை,
மறுப்போரைத் தூற்றிடுவோம்

கூடித் தொழில் புரிவோம் குற்றமற வாழ்வோம்

மேலும்

நல்ல கருத்து தோழரே 24-Nov-2013 4:02 pm
"கூடித் தொழில் புரிவோம் குற்றமற வாழ்வோம்" கருத்து நன்று!.. 24-Nov-2013 9:13 am
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (5)

சேர்ந்தை பாபுத

சேர்ந்தை பாபுத

சேர்ந்தகோட்டை( இராமநாதபு
தினேஷ்n

தினேஷ்n

குலையநேரி (திருநெல்வேலி Dt)m
ராஜேந்திரன்

ராஜேந்திரன்

நாகர்கோவில்
நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு

இவர் பின்தொடர்பவர்கள் (5)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
சேர்ந்தை பாபுத

சேர்ந்தை பாபுத

சேர்ந்தகோட்டை( இராமநாதபு

இவரை பின்தொடர்பவர்கள் (5)

நா கூர் கவி

நா கூர் கவி

தமிழ் நாடு
ராஜேந்திரன்

ராஜேந்திரன்

நாகர்கோவில்
மேலே