கற்பனை
காற்றைப் பிடித்து காணல் நீரில் நணைத்து
இரவு வெயிலில் எளிதாய் காயவைத்தேன்
மேகத்திலேறி மெதுவாய் பயணித்து
இந்திரனுக்கு இனிதாய் பரிசளித்தேன்
அவன் இடியும் மின்னலும் ஈங்கொரு புயலும்
வழியும் புன்னகையுடன் எனக்கு வழங்கினான் பெற்றுக்கொண்டு நன்றியுரைத்தேன் - பின்
மழைத்துளியின் மையம் பற்றி விரைவாய்
வந்து சேர்ந்தேன் வீட்டிற்கு.