தமிழொன்றே மொழி
கிறுக்கல்களையும் குழறல்களையும்
கோடிப்பேர் சார்ந்துகொண்டு
இனித்திடும் மொழியென்பார்
இன்பக்கூத்தாடிடுவார்
பழைமை வாய்ந்ததென்பார்
போலிச்சரித்திரமாய் பிரிவே தமிழென்பார்
இசையெனும் பெயரினாலே ஓர்
ஈனசுரத்தினிலே முழங்கிடுவார்
பாட்டும் இயற்றிடுவார் அது பெரும்
பாவம் என்றுணராமலே
அறிவார் தமிழர் அறியாமையால் பிதற்றும்
அவரே மூடரென்று
தமிழொன்றே மொழி பிறிதெல்லாம் ஒலி.