நிர்வாணமாய் ஒரு நிலவு

முன்பு எப்போதும் இல்லாமல்... அழகாய்...
இன்று அவள்....!

பேருந்து நிறுத்தங்களில்....
உதயமாகும் அநேக காதல்கள்.......!

ஆர்ப்பரிக்கும் பார்வைகளும்...
மௌன வார்த்தைகளும்... பரிமாறிக்கொள்ளப்படும்
பலிபீடம் ...... 'பயணிகள் நிழற்குடை'......

கண்களில் தொடங்கி.... கடற்கரை வரை
இழுத்துசென்றது காதலின் வெப்ப சலனம்.......!

மௌன பாஷைகளும்... காதலின் சம்பாசனைகளும்
அவனின் விரல் நுனிகளின் தீண்டல்களில்......
முக்தி அடைகின்றன.....!

காலம் கடக்கின்றது.....
அவளின் காதலும் கனிகின்றது .......

தேய்பிறை..... இரவுகளின் வெளிச்சத்தில்.....
ஒரு மெழுகுவர்த்தியும், ஒரு தீ குச்சியும்....!

ஆம்........
முன்பு எப்போதும் இல்லாமல்....... அழகாய்....
இன்று அவள்........!

உடை மாற்றிய வெண்ணிலவின் பௌர்ணமி வெளிச்சத்திலும்...
இரவுகளை இரவல் கொடுத்துவிட்டு..........
நிற்கின்றது.........
... நிர்வாணமாய்......
அந்த 17 வயது நிலவு.............!

............UNMATURED LOVE.................

எழுதியவர் : vidhya (16-Feb-14, 1:35 pm)
பார்வை : 259

மேலே