கண்டனம்
தொலைதூர
அமெரிக்காவில்
தொழில்புரியும்
அப்பாவிற்க்கு
அலைபேசி அழைப்பு........
மலேசியாவிலிருந்து
மகள்....
தாய்லாந்திலிருந்து
தம்பி பேசியதாக
தகவல் சொன்னாள்.....
அடுத்தமாதம்
ஆஸ்திரேலியாவிலிருந்து
அம்மா வருவாளா?
ஆசையோடு வினவினார் அப்பா...
அழைப்பை துண்டிப்பதற்க்குள்
அவசரமாக சொன்னாள்
மாதப்பணம் அனுப்ப
மறந்துவிடவேண்டாம்......
காஞ்சிபுரம் காப்பகத்தில்
பாட்டியும் தாத்தாவும்........