இனி இது விதி

நீதான் முக்கியம் !
உனக்காகவே என் எஞ்சிய நாட்கள் !
அதற்காகவே என் அழுகை !
என,
இனி மனம் வருந்தி,
என்னிடம் நீ வரப்போவதில்லை !
என்றாவது புரிவாய் !
மன்னிப்பை தருவாய் !
உனக்காகவே இருப்பேன் !
என,
இனி நான் காத்திருக்கப்போவதுமில்லை !
ஒருவர் மனதை ஒருவர் கொன்று,
நித்தமும் நடத்திய உணர்வு நரபலி,
ஒரு முடிவுக்கு வந்துவிடும் !
அருவமாய் உருவான காதலை,
ஆயுள்முழுதும் செய்தகொலை,
வழிதப்பி வழிபோகும் !
அதனாலே விழிநோகும் !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (16-Feb-14, 10:20 pm)
சேர்த்தது : bharathkannan
Tanglish : ini ithu vidhi
பார்வை : 95

மேலே