யோசிப்பு

நண்பன் 1.= என்னடா யோசிக்கிற ..?

நண்பன் 2.=என்ன யோசிக்கிறதுன்னுதான் யோசிக்கிறேன்..

நண்பன் 1= அப்போ யோசிக்கிறது எப்படீன்னு
யோசிச்சு பாரேன்..

நண்பன் 2== உன் யோசனை நல்லாத்தான் இருக்கு, ஆனா நான் யோசிக்கிற யோசனையை நீயும் யோசிச்சிடுவியோன்னு யோசனையாய் இருக்கு.

நண்பன் 1== ச்சே அப்ப்டியெல்லாம் யோசிக்காத,
உன்னை யோசிக்கச் சொல்லிவிட்டு அதையே நானும் யோசிக்கிற அளவுக்கு நான் ஒன்னும் யோசனை இல்லாதவன் இல்லை.

நண்பன் 2== நீ யோசனை இல்லாதவன் இல்லை என்பதால்தான் நான் கொஞ்சம் யோசிச்சிட்டேன்.
யோசிச்சி பார்த்தப்போ யோசனை இல்லாதவன் யோசனை சொல்லமாட்டான் யோசனை உள்ளவன்தான் யோசிச்சு சொல்லுவான் என்று புரியுது .

நண்பன் 1==யோசனை உள்ளவன் நான் என்று உன்னை யோசிக்க வைத்த என்னைப்பற்றி
யோசிச்சி உன் யோசனையை திசை திருப்பாம நீ யோசிக்க வேண்டியது யோசிச்சு நான் சொன்ன யோசனை எப்படீன்னு சொல்லு.

நண்பன் 2== யோசிக்கிறதையே யோசிக்க வைக்கும் யோசனை சொன்ன உன் யோசனையை யோசிக்காம, யோசிக்கிறது எப்படீன்னு யோசிச்சு ஒரு யோசனை சொல்லணும் என்றால் இப்போ நீ என்னை தனிமையிலே விட்டா நல்லதுன்னு யோசிக்கிறேன்..

நண்பன் 1== நல்ல யோசனைதான் நான் இருந்து உன் யோசனையைக் கெடுக்காம உன்னை யோசிக்க விடணும் என்றுதான் நானும் யோசிக்கிறேன்..

நண்பன் 2== யோசிச்சிகிட்டே இருக்காம யோசனையை செயல் படுத்த யோசிச்சா நல்லது.

நண்பன் 1==இதுக்குமேல் இங்கே நான் இருந்தால்... என்று நீ யோசிக்கிறது விளங்குது
நான் வாறேன்..

என்று கூறி வெளியேற முற்பட்டவரை ஓடி வந்து பிடித்துச் செல்கிறார்கள்.மனநல வைத்தியசாலை ஊழியர்கள்.

இப்போது புரிந்திருக்குமே.. இந்த உரையாடல்களை நிகழ்த்தியவர்கள் யாரென்று..

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (17-Feb-14, 1:50 am)
பார்வை : 195

சிறந்த நகைச்சுவைகள்

மேலே