என்றும் உன்னுடன்

முகவரியில்லாத பயணம்
நான் தொலைந்தாலும் உன்னை தொலைக்க மாட்டேன்.....

வலியே தெரியாத காயம்
நான் வலியால் துடித்தாலும்
உன்னை மறந்திடே மாட்டேன்...

வடிவம் இல்லாத உருவம்
நான் மறைந்தாலும்
உன்னை மறக்க மாட்டேன்....

உறவு தெரியாத உணர்வு
நான் மூச்சு விட்டாலும்
உன் சுவாசம் விட மாட்டேன்....

நான் தடுமாறினாலும்
உன்னை தவற விட மாட்டேன்....

எழுதியவர் : சத்தியா (17-Feb-14, 7:52 am)
Tanglish : endrum unnudan
பார்வை : 809

மேலே