572- இறைவனுக்கு நன்றி
சித்திரம் பார்த்தால் இன்பம்;
=செந்தமிழ் கேட்டால் இன்பம்;
முத்தமும் கொடுத்தால் இன்பம்;
=முருக்கு,நெய் நுகரின் இன்பம்;
கத்திடும் அலையில் நின்று
=கால்களைக் கழுவ இன்பம் ’
சித்திரை வெயிலின் போது
=சிறுமழை பெய்தால் இன்பம்;
இத்துணை வசதி செய்தே
=என்னையும் அனுப விக்க
எத்துணை உதவி செய்வாய்!
=இறையுனைத் தொழுதால் இன்பம்!
இரண்டு நாட்களுக்கு முன் இதை எழுதி
வைத்துவிட்டு; கோடை மழைக்காகக்
காத்திருந்தேன்! நேற்றிரவு மழை பெய்ததைக் கண்டு என் நன்றியை இறைவனுக்குச் சமர்ப்பித்துவிட்டேன்!