அச்சொடிந்த தேர்க்கால்
தேர்க் காலின் அச்சு ஒடிந்து போகலாம் ;
வடம் பிடித்து இழுக்க நாங்கள் உள்ளோம் ;
இறைவன் பிறப்பில் இதுவும் ஒன்று ;
ஏற்றுக் கொள்வது மனிதனின் நியதி ;
மாற்றுத் திறனாளிக்கும் மானம் உண்டு ;
தன்னம்பிக்கை உடையவன் தலைவன் ஆவான் ;
தரணியை ஆளும் சக்தியும் உண்டு ;
மறுப்பதும் ஏற்பதும் நம்மின் கடமை ;
தன் நம்பிக்கைக் கால் கொண்டு வடம்
பிடித்து நிலை படுத்தும் திறனாளி
தேர்க் காலின் அச்சு ஒடிந்தால் என்ன ?
தேரின் அச்சாணி இவனின் தன்னம்பிக்கை ;
;
ஊனம் என்பது உடலின் அளவே !!!!!
கால்கள் இழப்பினும் கவலை இல்லை .
கண்கள் இழப்பினும் கவலை இல்லை .
ஊமையராயினும் உற்றக் கேடு இல்லை
செவிப்புலன் போயினும் சீர்கேட வில்லை .
எவுறுப்பு இழப்பினும் ஏதம் இல்லை
செவ்வையாய் மனத்திடம் சிறக்கப் பெற்றால்
நம்பிக்கை என்னும் நங்கூரம் தனை
கொம்புப்பிடியாய் கொண்டவர் தமக்கு
அங்கக் குறைவால் அயர்வே இல்லை
ஊனம் என்பது உளத்தைத் தொடாது .
ஊனம் என்பது உடலின் அளவே !!!!!
அச்சொடிந்த தேர்க் காலும் மண்டியிடும் !!!
இவன் முன்னால் கைக் கட்டி சேவை செய்யும் !!

