கிழக்கினைக் கிழிக்கும் குரல்கள் - மணியன்

ஏறு மட்டும் எங்களோடு
எங்கள்
வயலுடன் சேர்த்து
வரப்பையும் மேய்ந்தனரே. . . . .

******

ஏடு முடித்துக் குவிந்திட்டோம்
எங்களை
ஏற்றி விட மறந்து
ஏலமிட்டு நாடு கடத்தினரே. . . . .

******

கூடு இன்றி அலைகின்றோம்
எமக்கு
குடிக்கக் கஞ்சி
கொடுக்க வேணும் மறுத்தனரே. . . . .

******

நந்தவனம் மணக்க மலர்கின்றோம்
எங்களை
சொந்த வனம் சேராமல்
கந்தல் ஆக்கி கழிக்கின்றனரே. . . . .

******

துணை நீங்கித் தவிக்கின்றோம்
எங்களை
விரிப்பு கொண்டு
விருந்து உண்ணப் பார்க்கின்றனரே. . . . .

******
வலுவிளந்த தோள் கொண்டோம்
எங்களை
வன்மம் கொண்டு
வாய் பிளந்து இளித்தனரே. . . . .

******
தூதும் அனுப்பிப் பார்க்கின்றோம்
எங்களை
வதம் செய்து
பதம் பார்த்து மகிழ்கின்றனரே. . . . .

******
காடு போகத் துணிந்திட்டோம்
அங்கும்
மயானம் மறைத்து
மாடி வீடு கட்டினரே. . . . .

******
வாக்கு மட்டும் அளிக்கின்றோம்
எங்கள்
வாட்டம் நீங்க
வழி சொல்ல மறந்தனரே. . . . .

******
தமிழ் கொண்டு தடைகளைவோம்
எங்கள்
தரம் தாழ்ந்து
தலை கவிழ வைத்தவரே. . . . . . . . . . . . . . .

எழுதியவர் : மல்லி மணியன் (19-Feb-14, 1:08 am)
பார்வை : 205

மேலே