முடிவை சுமந்து செல்கிறேன்
கையில்
கிடைத்த கை கெடிகாரம்
இடைவிடாமல்
ரிங்காரமிட்டது
நீ யார் என்றேன்..?
காலத்தை
பின்தொடர்ந்து செல்லாமல்
முன்னேறிச்செல்லும்
வாழிகாட்டி
நான் என்றது..!
சில மணித்துளியும்
யாசித்தேன் - சில நேரமும்
யோசித்தேன்
சொல்வது
உண்மையா என்று...!
மறுபடியும்
என்னை ஒரு குரல்
அழைத்தது..!
என் கைகளை
உயர்த்தினேன்
உணர்ந்தும் கொண்டேன்..
காலத்தின்
முடிவை
நழுவ விடாமல்
பிடித்துக்கொள்
என்று - எனது கை கெடிகாரம்
எச்சரிக்கை செய்தது..
புதிதாய்
கிடைத்த கை கடிகாரமோ
காலத்தை
வெள்ள
வழிகாட்டவும்
செய்கிறேன் என்றது...
யாரை நம்புவேன்
யாரை
பின்தொடர்வேன்..!
என் வாழ்வின்
முடிவுகளை அறியாமல்
என் கையில்
சுமக்கிறேன் கை
கெடிகாரமாக...