நட்பூ 0 தாரகை 0

நட்பு என்பது உண்மையல்ல - என
***தப்பாய் பிரசங்கம் செய்துவிட்டேன்
உப்பைப் போல்தான் நட்பென்று - இன்று
***உன்னால் உண்மையை உணர்ந்துவிட்டேன்

எந்தன் மனது சோகத்தை - நீ
***எனக்கு முன்னே அறிந்திடுவாய்
அந்தப் புரிதல் மட்டும் போதும்
***அத்தனை சோகமும் பறந்துவிடும்

இதயம் கனக்கும் எந்நாளும் - உன்
***இனிய நட்பே கை கொடுக்கும்
புதிய நம்பிக்கை உண்டாக்கும் - மன
***புண்ணிற்கு அதுவே மருந்தாகும்

செய்திகள் ஏதும் இல்லாமல் - சிறு
***சேயைப்போல பிதற்றிடுவேன் - அதை
தாய்மையின் பொறுமையில் கேட்டிடுவாய் - அத்
***தன்மையில் உனக்குள் மூழ்குகிறேன்

என்னில் உன்னைக் காண்கின்றேன் - உன்னில்
***இதுவரை சிறுமை கண்டதில்லை
மண்ணில் இவ்வுடல் உள்ளவரை - உன்
***மகத்துவ நட்பை வேண்டுகிறேன்

நட்பே! உயிரே! என்றெல்லாம் - பிற
***நண்பர்கள் போலநீ பேசவில்லை - ஆனால்
கற்பை நட்பில் உணர்த்திவிட்டாய் - ஆக
***காலம் தாண்டியும் கவலையில்லை

எழுதியவர் : தாரகை (20-Feb-14, 8:01 am)
பார்வை : 168

மேலே