கேடுகெட்ட அரசியல்

உண்மை தலைவர்கள்
ஒதுங்கிக்கொண்ட வேலையில்
ஊழல்வாதிகள் கரம்
ஓங்குகின்ற நேரம் ...........

நல்லவர்களின் வார்த்தைகளை
நாளேடுகள் கூட மறந்துவிட
முடங்கிப்போகின்றது
நல்லவர்களின் நாடளுமன்றப்பயணம்.......

பொல்லாப்புபேசி பொய்யாட்சிநடத்துகின்ற
நாடகக்காரர்களின் நலன்களுக்கு பஞ்சமில்லை
நடுத்தெரு சண்டைகள் கூட
நாடாளுமன்றத்தில் அரங்கேறுகிறது அரசியலாய்..

மிளகாய்பொடி தூவியும்
மேஜை உடைத்தும்
காட்டுமிராண்டிகளின் கத்தல்களால்
கலங்கி கண்ணீர்வடிக்கிறது ஏழைகள் நெஞ்சம் .......

சிந்தித்து செயல்படுத்தவேண்டிய
சட்டதிட்டங்கள் எல்லாம்
சின்னாபின்னமாகின்றன
காகித குப்பைகளாய் ..........

அரசியல்வாதிகளின் அடாவடிகளால்
நல்லதொரு திட்டங்கள்
நாளொன்றும் பொழுதொன்றுமாய்
வீணாகி காத்திருக்கின்றன ஒப்புதலுக்கு .......

இந்த உத்தம புத்தரர்களின்
அந்தரங்கங்களை பட்டியலிட்டால்
அதைவிட கேவலமானவைகள்
எதுவுமே இருக்கமுடியாது ...........

பொல்லாப்பு அரசியலில்
பொய்யானத தகவல்களால்
இன்றுவரை தெளியாமல்
குழம்பிப்போய் கிடக்கிறது மக்களின் மனம் .......

நாறிப்போன அரசியல்
மாறுகின்ற நாள் என்றோ
நல்லவர்களின் எண்ணங்கள்
நாடாளும் நாள் என்றோ

எழுதியவர் : வினாயகமுருகன் (20-Feb-14, 10:21 am)
பார்வை : 169

மேலே