பொய்
பிறக்காமலே இறந்து விடுவேன்
என்ற மருத்துவரும் பொய்த்துவிட்டார்.
பிறந்ததும் இறந்து விடுவேன்
என்ற ஜோதிடரும் பொய்த்துவிட்டார்.
ஈழத்துப் போரின் முடிவில்
தலை தாயின் வயிற்றின் உள்ளே
உடல் தாயின் வயிற்றின் வெளியே
நான் வெற்றிக்குப் பிறந்தவன்.