இந்த கடலுக்கு அப்பால்
ஆறாத காயங்களின்
தழும்பாக
தீராத கண்ணீரின்
தடமாக
வேரில்லா மரத்தின்
விதையாக
இன்னும் மிச்சமிருக்கிறது
என்
செம்மண்ணும்
செந்தமிழும்
இந்த கடலுக்கு
அப்பால்....
வங்கக் கரையில் இருந்து
ஒரு
பறவை.