யார் பெரியவர்
வயதில் மூத்தவனும்!
வசதியில் பெருத்தவனும்!
அனுபவத்தில் உயர்ந்தவனும்!
கல்வியில் சிறந்தவனும் !
பெரும் பதவியில் இருப்பவனும்!
பெருமைகள் பேசுபவனும்!
பெரியவராய் இருக்க முடியா!!
எண்ணத்தால் உயர்ந்து!
எளிமையாய் இருந்து!
தன்னலம் கருதாமல்!
பிறருக்காக வருந்தி!
பொதுநலமாய் சிந்திந்து!
தன்னடக்கத்துடன் இருக்கும்
மனிதன் மட்டுமே!
பெரியவராய் வாழ்ந்திட முடியும்!!