என்று தீருமோ

சீரும் வேண்டும்
சிறப்பும் வேண்டும்
சிறச் சிறப்பாக
சீரும் வேண்டும்!

மூக்கும் வேண்டும்
முழியும் வேண்டும்
சீக்கு இல்லாத
தெளிவும் வேண்டும்!

தளைந்து வேண்டும்
மெலிந்து வேண்டும்
அதிகமில்லாத
உயரம் வேண்டும்!

நகையும் வேண்டும்
பொருளும் வேண்டும்
செக்கச் சிவந்த
சிவப்பும் வேண்டும்!

இத்தனையும் வேண்டும்
இது மட்டுமல்ல
இத்யாதி இத்யாதி
இன்னும் வேண்டும்!

அடுக்கிக் கொண்டே
அகலவாய் அம்மணி
ஆமாம் என்பதற்காய்
அவள்தம் அடிமை!

அழகில் குறியாய்
ஆண்மகன் அங்கே
அம்மணி அம்மாவின்
இசைவின் சங்காய்!

விற்பதென்னவோ
ஆண் மகனை
விதிமுறை மட்டும்
பெண்ணுக்கு ஏனோ?

என்று வருவாரோ
இன்னொரு காந்தி
சென்று சொல்வேனே
பெண்ணுக்காய் நீதி

பெற்று தந்திட
போர் செய்ய வேண்டி!

வேண்டும் வேண்டும்
நிம்மதி வேண்டும்
பெண்ணை பெற்றிடும்
தந்தைகளுக்கு!

என்று சொல்லியே
வான்குரல் எழுப்பி
கொன்று தீர்ப்பேனே
கொடியவர் தம்மை!

எழுதியவர் : உமர்ஷெரிப் (20-Feb-14, 10:01 pm)
பார்வை : 199

மேலே