உயிர் தொலைத்த பதிவுகள்
நந்தவன மஞ்சள்களின்
வெளிர்நிறக் கவலை விழுங்கி
ஒரு மின்னல்
வெளிச்சத்துக்காய்....
பூக்களின் புழக்கடையில்
கைகோர்த்துக் காத்துச் சிரித்ததில்
தொடங்கியிருக்கிறது
வாழ்வியல் பதிவுகள்.....!!!
வண்ணங்கள் தவிர்த்த
வரலாறுப் பதிவுகளில்
எண்ணங்களும் இரண்டே.....!!
உணர்வுகளாய் வருடும்...!!
தவிர்த்தால்
உயிர்வலியாய் நெருடும்...!!!
எப்பொழுதும் பெருமை
பாடிக்கொண்டே திரிகிறது
பதிவுகள்....!!!
வியட்நாம் குரூரங்கள்
நிறுத்தியவைகளாக....
சோமாலியப் பசிவிளைவின்
உயிரெலும்பிகள்....
உணர்த்தியவைகளாக......!!
ஈழதேசத் தீரர்களின்
இனஉணர்வுக் கூடுதல்களாக...
நயாகராப் பூக்களின் வாசம்
சீனச் சுவர்களில்
பரப்பியவைகளாக....!!
எப்பொழுதும் பெருமை...!!!
வயதுகூட இளமை ஏற்பது
விஞ்ஞானங்களில் மட்டுமே
சாத்தியம்...!!
பதிவுப் பிரசவிகளுக்கும்
வயதேறி ... வண்ணங்களாய்
சிறகு
முளைத்துக் கொள்கிறது....!!!
உயர்ந்து பறக்கவில்லை
இந்தச் சிறகுகள்..
ஊடுருவிச் சிதைக்கிறது.....!!!
ஒரு தடம்தவிர்த்த
வாகனக் குப்புறங்களில்....!!!
ஒரு திருவுடலைத்
தீதழுவும் நிமிடங்களில்....
ஒரு பிரபல மானுடம்
தன்னறைக்குள் தனக்காக
காமம் கழிக்கையில்....!!
ஒரு களவுக்கான
முன்னோட்ட திட்டமிடுதலில்....!!
தடுக்கத் தவறிய
எல்லாக் கரங்களிலும்
பதிவுப் பிரசவிகளின்
அவசரமாய் இப்பொழுதும்
அதே
மின்னல் புன்னகைகள்...!!!
இயல்பாய் இருந்தாலும்
மனிதம் தவிர்த்த
பதிவுகள் .... வரலாறுகளுக்கு
பொருத்தமில்லை....!!!
குப்பைகளே....!!!