விடை தெரியா வினாக்கள்

எதற்காக
பூமி படைக்கப்பட்டது?

இந்த பிரபஞ்சம்
எங்கே முடிகிறது?

கடவுள் எப்போது
பிறந்தார் ?

பிறப்பும் இறப்பும்
எதற்காக?

இத்தனை ஆண்டுகளாக
நாம் எங்கே இருந்தோம்?

இத்தனை வினாக்களுக்கு
விடைகள் இருக்கிறதா ?

ஆறாம் அறிவுக்கு
விடை எட்டாமல் இருக்கலாம் !

* * *

ஆத்தாவும் தாத்தாவும்
தவிர
வேறொருவர் ஆட்சிக்கு
வருவாரா?

அதுவரை நம்
ஆயுள் முடியாமல் இருக்குமா?

சாதி
எதைவைத்து கண்டுபிடித்தார்
சாதிசான்றிதழில்
கையொப்பமிட்டவர்?

சாதியில்லா சமுதாயம்
பிறக்குமா ?

எந்த மதம்
அரிவாள் எடுக்க சொன்னது?

அன்பு
ஒழுக்கம்
கட்டுபாடு
போதிக்காத மதம் உண்டா?

அரசியல்வாதி ஆவதற்கு
மனித உருவில்
இருந்தால் மட்டும் போதுமா ?

தகுதி இருப்பின்
அது சட்டம் ஆகுமா?

நீதிமன்றங்களில்
நீதி மட்டுமே
தீர்ப்பு சொல்லப்படுகிறதா ?

நீதி மட்டுமே
தீர்ப்பாகும்
நாள் வருமா?
எப்போது வரும் ?

குடிப்பது மட்டும்தான்
போதையா?
மழலை சிரிப்பில்
போதையில்லையா?
இருந்தால்
குடிப்பது எதற்கு?

அம்மா தெய்வம்
என்றால் கோவில் எதற்கு ?

தெருமுனையில் இருக்கும்
பெருமாள் கோவிலுக்கும்
திருப்பதியில் இருக்கும்
வெங்கடாசலபதியும்
வேறுவேறா?

இருவரும் ஒருவரே
என்றால்
வித்தியாசம் எதற்கு?

வினாக்கள் முடிவில்லாதது
முடிவு உண்டா ?

விடை தெரிந்தோர்
விளித்திடுவீர்!

விடையாய் இருப்போர்
திருந்திடுவீர்!

**** **** ****
கோடீஸ்வரன்

எழுதியவர் : கோடீஸ்வரன் (20-Feb-14, 8:52 pm)
பார்வை : 124

மேலே