சொர்க்கம் செல்ல ஆசை
ஒரு பாதிரியாரும், ஒரு பஸ் டிரைவரும் ஒரே சமயத்தில் இறந்து மேலுலகம் சென்று எமதர்மனை சந்தித்தனர்.
“நான் கிராமத்து பாதிரியார். சொர்க்கத்தில் எனக்கு இடம் கிடைக்கும் என நான் நம்புகிறேன்” என்று பாதிரியார் கூறினார்.
“நான் கிராமத்தை சேர்ந்த பஸ் டிரைவர். எனக்கும் சொர்க்கம் செல்ல ஆசை” என்றான் பஸ் டிரைவர்.
‘சரி’ என்ற எமதர்மர்,
“நீங்கள் சில வருடங்கள் காத்திருக்க வேண்டும்” என்று பாதிரியாரிடம் சொல்லிவிட்டு, பஸ் டிரைவரிடம், “நீங்கள் இப்போதே சொர்க்கத்துக்கு போகலாம்” என்று கூறினார்.
அதிர்ந்த பாதிரியார்,
“ஒரு நிமிடம்!. நான்தான் ஒவ்வொரு ஞாயிறும் சர்ச்சில் மக்களுக்கு பிரார்த்தனை செய்வது எப்படி என்றும் நன்மை செய்வது எவ்வாறு என்றும் சொல்லிக் கொடுத்திருக்கிறேன். ஆனால் அவன் வெறும் குடிகார டிரைவர்தானே?” என்று கேட்டார்.
அதற்கு எமதர்மன் சொன்னான்,
“அது சரிதான். ஆனால் நீங்கள் சொல்லிக் கொடுக்கும் போது மக்கள் தூங்கிக் கொண்டுத்தான் இருந்திருக்கிறார்கள். ஆனால் அவன் பஸ் ஒட்டும்போது, உள்ளிருந்த அனைவரும் எவ்வளவு வெறித்தனமாக பிரார்த்தனை செய்தார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா?!”
சிறந்த நகைச்சுவைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
