வீழ்வேனென்று நினைத்தாயோ

அரவணைத்து ஆதரி..!
அதட்டி தட்டிக்கொடு..!
உனக்கு உரிமையுண்டு -உன்
எதிரியாக எனை நீ
கருதிக்கொண்டு என்னை
கரியாக்கி விடாதே...!

வெந்தனலாய்
எரியுமென் தன்னம்பிக்கை
என்னில் படர்ந்திருக்கிறது
முயற்சி காற்றில்
விஸ்வரூப தீயாக
எந்த நேரத்திலும்
எந்த திசையிலும்
எழுந்திட முடியும்..!

தோழனே..!
நீயென் எதிரியல்ல..!
நீயே என் தூண்டுக்கோல் !

மங்கிக்கொண்டிருக்கும்
தீபத்தின் திரிகளை
சாமி தூண்டினாலும்
ஆசாமி தூண்டினாலும்
பொங்கிக்கொண்டுதானே
ஜொலிக்கும்.

சீண்டிவிட்டால்
துவண்டுக்கொண்டு
வீழ்வேனென்று நினைத்தாயோ?

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார். (20-Feb-14, 10:46 pm)
பார்வை : 789

மேலே