ஏன் இப்படி செய்தாய்

பரதேசியாக இருந்தேன் !
உன்னை பார்க்கும் முன் !
அழுக்குடை கலைத்தேன்!
எண்ணெய் தலையில் தழுவிட!
முக பூச்சு என்னை அலங்கரிக்க !
மனிதனாய் உன்னை சந்தித்தேன்!!

உன்காதல் என்மீது விழ!
எத்தனை பிரயத்தம் செய்தேன்
நீ அறிவாய் ...!
உன்னை மகிழ்விக்க...
என் உயிரை பணயம் வைத்து
பஸ்ஸில் படிக்கட்டிலும் பயணித்தேன்!!

இதயத்தை நிரப்பி உறக்கத்தை கெடுத்தாய்!
திரும்பும் திசையெங்கும்
உன் முகமாய் தெரிந்தாய்!
மலரும் நினைவுகளும்
ரணமாய் ஆனதடி...!

உன்மீது பித்தாய் இருந்த என்னை
ஜடமாய் சபித்து விட்டாய் !
ராஜாவாய் இருந்த நான் !
பைத்தியமாய் ஆனேனடி...!!

எல்லாம் முடிந்ததென்று
கொல்லாமல் கொல்கிறாயே!!
என்ன நடந்ததென்று சொல்லமால்
எத்தனையோ முறை உன்னை மறித்தும்
பதில் இல்லையடி உன்னிடத்தில்
என்னவென்று அறியாமல்
அனலில் விழுந்த புழுவாய் துடிக்கிறேனே!!

உன் வாய் அசைப்பிற்க்காக வாசலில்
உயிர் உசலாடுதடி...!
உண்மை தெரிந்து உயிர் பிரிந்தாலும்
மனம் மகிழ்வேன்...!
பொன்வண்டு காலில் குத்தி விட்டாய் முள்ளை
வலியால் சுற்றுகிறேன் நானும் ...!

எழுதியவர் : கனகரத்தினம் (21-Feb-14, 3:08 am)
Tanglish : aen ippati seythaay
பார்வை : 328

மேலே