பூக்களாய்

பெண்ணே என் காதலை
வானில் எழுதுகிறேன்...
பூக்களும் எனக்கு
தோள் கொடுக்க,
உன் செவிகள் மட்டும்
ஏனடி சாய மறுக்கிறது...

உன் செவிகள் சாயவில்லை
என்றால்,
நான் சாய்ந்து விடுவேனடி...

உன் மடியில்
பூக்களாய்...

எழுதியவர் : மதுராதேவி... (21-Feb-14, 3:38 pm)
சேர்த்தது : மதுராதேவி
Tanglish : pookalaai
பார்வை : 102

மேலே