மழைத்துளி

என்னை மயக்கியவள்!!!
என்னில் மயங்கியவள்!!!

மனம் எல்லாம் மணம்பரப்பி
மணல் அலைபோல மதி இறங்கி

என்னுள் வசிப்பவள்
என் மழை தோழி!!!!!!!!!!


என் உடல் நனைந்து
உள்ளம் சிலிர்த்து

எண்ணம் எழுகையில்
கையில் விழுந்தால்

தொட்டு பாக்க
சொட்டு நீராய்

கண்ணாம்பூச்சி ஆடினாள்
எட்டி பிடிக்க முயற்சித்து

எட்டு வைத்தேன்
என்னையும் சேர்த்து

வட்டமடித்தாள்
வங்க கடலில்

என் சின்ன சிரிப்பை
சிறை வைத்தாள்

ஒரு சின்ன சிப்பியில்
உற்று பார்த்தேன்

காணவில்லை அவளை
எங்கே எங்கே என்று

நின்று தேடினேன்
இங்கே இங்கே என்று

என்னை அழைத்தாள்
நிமிர்ந்து பார்த்தேன்

மீண்டும் மேகத்தில்
மழைத்துளியாய்

அவள்!!!!!!!!!!!!

சிற்பிக்குள் முத்தாய்

நான் !!!!

எழுதியவர் : நிலா மகள் (21-Feb-14, 3:54 pm)
Tanglish : mazhaithuli
பார்வை : 97

சிறந்த கவிதைகள்

மேலே